89-செந்தமிழ்சிற்பிகள்

புலவர் குழந்தை (1906 - 1972)

புலவர் குழந்தை (1906 - 1972)

அறிமுகம்

புலவர் குழந்தை ஜூலை 1-ந் தேதி,1906-ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தின்  தெற்கே ஓல வலசுஎன்னும் சிற்றூரில் முத்துசாமி கவுண்டர், சின்னம்மை தம்பதியினருக்கு பிறந்தார். 

திண்ணை வகுப்பில் பயிலத் தொடங்கி, இலக்கிய ஆர்வத்தின் காரணமாக இலக்கணங்களை தன் முயற்சியால் கற்றுத் தேர்ந்து 1937-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். ஓலவலசை கிராமத்தில் முதன்முதலாக கையெழுத்து போடத் தெரிந்தவர் இவரே. 

தந்தை பெரியாரின் மீது மரியாதையும், அவரது  கொள்கை மீது பற்றும் கொணடவர்.1938-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் 1948, 1965 ஆகிய அனைத்து இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலும் பங்கெடுத்தார். 

தமிழ்ப்பணி 

  • புலவர் குழந்தை 38 ஆண்டுகள் தமிழாசிரியராக பணிபுரிந்தார். 
  • 1946 முதல் 1958-ம் ஆண்டு வரை ‘வேளாண்’ இதழை தொடர்ந்து நடத்தி வந்தார்.
  • செய்யுள் மற்றும் உரைநூல் வடிவில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
  • 1948ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற திருக்குறள் மாநாட்டில் இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. 
  • பெரியார் திருக்குறளுக்குப் பொருளுடன் உரை எழுத அமைத்த  அறிஞர் குழுவில்  முக்கியமானவர் புலவர் குழந்தை.

படைப்பு 

  • இருபத்தைந்தே நாட்களில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதினார். அந்நூல் திருக்குறள் குழந்தையுரை என்ற பெயரில்  வெளியிடப்பட்டது.
  • 1926-இல் புலவர் குழந்தை எழுதிய ஆடிப்பேட்டை நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு, வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரத உற்சவச்சிந்து, வீரகுமாரசாமி காவடிச்சிந்து, வெள்ளகோவில் வழிநடைச்சிந்து ஆகியவை வெளியிடப்பட்டது.
  • தொல்காப்பியர் காலத் தமிழர் வாழ்க்கைப் பண்பு நலன்களை ஆராய்ந்து தொல்காப்பியர் காலத் தமிழர்என்ற நூலை எழுதினார்.
  • தொல்காப்பியம் மற்றும் நீதிக்களஞ்சியம் ஆகியவற்றிற்கு உரை எழுதினார். 
  • யாப்பருங்கலக் காரிகை’ சற்று கடினமாக இருந்ததால், அதை எளிதாக்கி ‘யாப்பதிகாரம்‘ என்ற நூலை எழுதினார்.
  • பவணந்தி முனிவரின் நன்னூலை எளிமையாக்கி ‘இன்னூல்’ என்ற நூலை எழுதினார். ‘தொடையதிகாரம்’ என்பது இவரின் இன்னொரு இலக்கண நூல்.
  • இவர் எழுதிய நூல்களுள், 1948-ல் தடை செய்யப்பட்டு1971-ல் தமிழக அரசால் தடை நீக்கப் பட்ட இராவண காவியம்புகழ் பெற்றது.
  • இவர் எழுதி வெளிவந்த நூல்கள் மொத்தம் 34. அவற்றில் செய்யுள் வடிவில் 13, உரைநூல் வரிசையில் 3, இலக்கணப் பாங்கில் 3 , உரைநடை நூல் வகையில் 15 வெளிவந்துள்ளன.

 

விருதுகள் /சிறப்புகள் 

  • தமிழ் புலவர்கள் எல்லாம் தமிழரை இழிவுபடுத்தும் புராணக் கதைகளையே பாடிவந்தார்கள். அதற்கு மாறாக இராவண கவியத்தைப் படைத்து இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன்”--என தந்தை பெரியார் பாராட்டியுள்ளார்.
  • இராவண காவியம் பழைமைக்குப் பயணச்சீட்டு. புதுமைக்கு நுழைவுச் சீட்டு”--என அறிஞர் அண்ணா பாராட்டியுள்ளார்.
  • புலவர் குழந்தை அவர்களின் நூல்கள் 2006-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது.